தமிழ் இணைய மகாநாடு இன்று சென்னையில் ஆரம்பிக்கிறது.
அந்த நாளிலே எனது புதிய படைப்பொன்றை இங்கு
அறிமுகப்படுத்துகின்றேன்.
இனி இணையத்தில் இறைந்து கிடக்கும் தமிழ் பக்கங்களை
ஒழுங்குமுறையாக புதிய ஒரு தேடியை அறிமுகப்படுத்தியுள்ளேன்.
இதன் மூலம் திருவள்ளுவரை திருவல்லுவர் திருவாலவர் திருவல்லவர்
என ஆங்கில தமிழில் தேடி சளைத்தவர்களுக்கு இது ஒரு பலன் தரும்
முயற்சியான அமையும் என நினைக்கிறேன்.
இந்த தேடி மூலம் தமிழ் எதிர்கால எழுத்துருவான யூனிக்கோட் முதல்
ரப் எழுத்துருவில் அமைந்த சகல இணையபக்கங்களையும்
சர்வதேச இணையத்தில் கண்டுபிடிக்கலாம்.
For Unicode search
http://www.jaffnalibrary.com/tools/google.htm
Tscii,Madurai,Forumhub,Bamini,Tab..
http://www.jaffnalibrary.com/tools/google1.htm
இனி உங்கள் கருத்து கண்டு..
அன்புடன்
suratha yarlvanan
22.08.03
Pongu
Tamil Reader&Converter
எந்த
ஒரு தெரிந்த அல்லது தெரியாத எழுத்துருவாகவிருந்தாலும் அதனை
மேல் தட்டில் உள்ளிட்டு கீழே உள்ள ஏதாவதொரு துவாரங்களை
சுட்டுவதன் மூலம் நீங்கள் உள்ளிட்டதை சீராக தமிழில்
வாசிக்கமுடியும்.
யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் எழுச்சிமிகு போராட்டமான பொங்கு தமிழின் நினைவாக இந்த
செயலிக்கு பொங்கு தமிழ் எனப் பெயரிடப்படுகிறது.
இந்த தானிறங்கி எழுத்துருவை பயன்படுத்த
அனுமதி தந்த திரு ஆவரங்கால் திரு சிறீவாஸிற்கு எனது நன்றிகள்
நெற்ஸ்கேப் பதிப்புகளில் இந்த செயலி
தானிறங்கி எழுத்துரு இல்லாமையினால் முழுமையாக வேலைசெய்யாது
என்பதை கருத்திலெடுக்கவும்.
தமிழை சர்வதேசஇணையத்துடன் முன்னோக்கி
நகர்த்த ஓர் உந்து சக்தி உதவியாக இந்த புதுவை யூனிக்கோட்
உருமாற்றியை வடிவமைத்துள்ளேன்.தமிழில் இன்று அதிகமாக பாவனையிலிருக்கும்
எழுத்துருக்களை யூனிக்கோட் எழுத்துருவிற்கு மாற்றவும்,இணைய
இணைப்பிலிருந்தபடியே
எந்தவித தரவிறக்கமும் செய்யாமலேயே உங்கள் ஆவணங்களை உருமாற்றவும்
இதன்மூலம் முடியும்.
இந்தப் பக்கத்தை இலகுவாக உங்கள்
கணனியில் சேமிப்பதன் மூலம் இதனை உங்களது ஆக்கிக்கொள்ளலாம்.